TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 23 , 2023 425 days 230 0
  • மத்திய அரசானது, நீண்ட நாட்களாக  நிலுவையில் உள்ள ஓய்வூதியம் தொடர்பான பல வழக்குகளைத் தீர்ப்பதற்காக வேண்டி டெல்லியில் 8வது அகில இந்திய ஓய்வூதிய அதாலத்தினைத் தொடங்கி வைத்துள்ளது.
  • உலக சுகாதார அமைப்பானது, (WHO) சர்க்கரை சாராத இனிப்பேற்றிகள் (NSS) குறித்த ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
    • உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்காக அல்லது தொற்றா நோய்களின் (NCDs) அபாயத்தினைக் குறைப்பதற்காக வேண்டி சர்க்கரை சாராத இனிப்பேற்றிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அணித்தலைவர் பிரதிமா புல்லர் மால்டோனாடோ நியூயார்க் காவல் துறையில் உயர் நிலைப் பதவியில் உள்ள (NYPD) தெற்காசியப் பெண்மணி என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்