TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 25 , 2023 423 days 248 0
  • டாடா குழுமத்தின் தலைவர் N.சந்திரசேகரன் அவர்களுக்கு, இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் இடையேயான வர்த்தக உறவினை வலுப்படுத்துவதற்காக என்று அவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக பிரான்சு நாட்டின் உயரிய குடிமை விருதான செவாலியர் டி லா லெஜியன் டி'ஹானர் விருது வழங்கப்பட்டுள்ளது.
    • உதகமண்டலத்தில் உள்ள தாவரவியல் பூங்கா அதன் 125வது ஆண்டு மலர் கண் காட்சியைக் கொண்டாடுகிறது.
  • முக்கிய மந்திரி தீர்த்த-தர்ஷன் யோஜனாவின் கீழ் யாத்திரை மேற்கொள்ளும் (புனித யாத்திரை) மூத்தக் குடிமக்களுக்கு (முதியோர்) இலவச விமானப் பயண வசதிகளை வழங்கும் முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் மாறியுள்ளது.
  • மத்திய அரசானது, பெருநிறுவனங்களின் பெயரகற்றச் செயல்முறையினை துரிதப் படுத்துவதற்கான மையத்தை (C-PACE) அமைத்துள்ளது.
  • நிறுவனங்களின் பதிவினைப் பதிவேடுகளில் இருந்து சரியான நேரத்தில் மற்றும் செயல்முறைக்கு உட்பட்ட வகையில் நீக்கச் செய்வதை இது உறுதி செய்து, பங்கு தாரர்களுக்கு சரியான தரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கரஞ்சாவில் சாகர் பரிக்ரமா என்ற யாத்திரையின் ஐந்தாம் கட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்