தொழிலதிபர் கருமுத்து T.கண்ணன் சமீபத்தில் மதுரையில் காலமானார்.
இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கர் ஆகவும் தியாகராஜர் மில்ஸின் தலைவராகவும் செயல்பட்டார்.
G20 அமைப்பின் மூன்றாவது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை செயற்குழு (ECSWG) கூட்டமானது மகாராஷ்டிராவின் மும்பை நகரில் நடைபெற்றது.
தேசிய விசாரணை அமைப்பானது, 'த்வஸ்த் நடவடிக்கை’ என்ற பெயரிலான ஒரு இயக்கத்தினை நாடு முழுவதும் மேற்கொண்டது.
2022-23 ஆம் ஆண்டில், அரசுக்குச் சொந்தமான கடன் வழங்கீட்டு நிறுவனங்களில், GeM தளத்தில் மொத்தமாக 592.82 கோடி ருபாய் கொள்முதல் செய்ததையடுத்து கனரா வங்கி மிகப்பெரிய கொள்முதல் செய்த நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
குஜராத்தில் உள்ள ஓகா எனுமிடத்தில் அமைக்கப்பட உள்ள தேசியக் கடலோரக் காவல் துறையின் (NACP) நிரந்தர வளாகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அடிக்கல்லினை நாட்டினார்.
2023 ஆம் ஆண்டில் முடிவடைந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் ஒட்டு மொத்த இலாபமானது 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது.
உலகளாவிய தனியார் பங்கீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன், சர்வதேச மணிகற்கள் ஆய்வு நிறுவனத்தில், சீனாவில் அமைந்துள்ள முதலீட்டு நிறுவனமான ஃபோசன் மற்றும் ரோலண்ட் லோரி கொண்டிருந்த 100% பங்குகளை வாங்கியுள்ளது.