ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம் இஸ்ரேல் அரசாங்கத்துடன் கை கோர்த்து ‘இந்தியா - இஸ்ரேல் நீர் தொழில்நுட்ப மையத்தை’ நிறுவியுள்ளது.
தமிழக அரசு 2023 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி முதல் குட்கா மீதான தடையை ஓராண்டுக் காலத்திற்கு நீட்டித்துள்ளது.
தமிழகம் இத்தடையை 2016 ஆம் ஆண்டு அமல்படுத்தியது.
சமீபத்தில் உலகத் தடகள அமைப்பினால் வெளியிடப்பட்ட ஆண்கள் ஈட்டி எறிதல் தரவரிசையில் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா தனது வாழ்நாளில் முதல் முறையாக உலகின் நம்பர் 1 வீரர் ஆனார்.
சீனா ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் முன்னணி கார் ஏற்றுமதியாளராக மாறி உள்ளது.
பிக்ரம் சம்வத் நாட்காட்டியின் படி 2080 ஆம் ஆண்டை 'நேபாளத்திற்கு வருகை தரும் தசாப்தம்' என்றும், 2025 ஆம் ஆண்டைச் சுற்றுலாவுக்கான ஒரு சிறப்பு ஆண்டு என்றும் நேபாளம் அறிவித்துள்ளது.
அயர்லாந்து நாடு மதுபானங்களின் முகப்புச் சீட்டில் புற்றுநோய் எச்சரிக்கைகள் மற்றும் கலோரி அளவுகுறித்து அச்சிடப்பட வேண்டும் எனப் புதிய விதிகளை வகுத்து உள்ளது.