புகை பிடிப்பவர்களுக்குத் தீங்கைக் குறைக்கும் கருவியாக மின்- சிகரெட்டுகள் குறித்த (vaping) சாத்தியமான நன்மைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மே 30 ஆம் தேதியன்று உலக வேப் தினம் (மின்னணு சிகரெட்டு) கொண்டாடப் படுகிறது.
அசாமின் குவஹாத்தி மற்றும் மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி ஆகியப் பகுதிகளை இணைக்கும் அசாம் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் விரைவு இரயிலைப் பிரதமர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
G20 ஊழல் எதிர்ப்பு பணிக் குழுவின் இரண்டாவது கூட்டமானது, சமீபத்தில் ரிஷிகேஷ் நகரில் நடைபெற்றது.
தெலுங்கானா மாநிலமானது, பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா எனப்படும் திட்டத்தின் மூலம், அனைத்து மக்களுக்கும் வங்கிச் சேவைகளை வழங்கிய ஒரு மாநிலமாக மாறி உள்ளது.
UNFCCC அமைப்பின் பங்குதாரர்கள் மாநாட்டின் 28வது அமர்வின் தலைவருக்கான ஒரு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக முகேஷ் அம்பானி நியமிக்கப் பட்டுள்ளார்.
சண்டிகர் ஒன்றியப் பிரதேசத்தின் கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை, கால்நடைகளின் மருத்துவச் சிகிச்சைப் பதிவேடுகளை கணினிமயமாக்கியதற்காக மின்-ஆளுமைச் சேவைக்கான 2023 ஆம் ஆண்டு ஸ்கோச் சில்வர் விருதினைப் பெற்று உள்ளது.
ஊடுகதிர் முனை வாக்கமானி செயற்கைக்கோளை (XPoSat) உருவாக்கச் செய்வதற்காக பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (RRI) இஸ்ரோ இணைந்து செயல்படுகிறது.
இது இந்தியாவின் முதலாவது மற்றும் உலகின் இரண்டாவது முனை வாக்கமானி ஆய்வுப் பணியாகும்.