இந்திய வெளியுறவுத் துறை விவகாரங்கள் அமைச்சகம், இந்தியாவிற்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு மற்றும் ஆசியச் சங்கமம் என்ற அமைப்பு ஆகியவை இணைந்து மேகாலயாவில் இந்திய - ஐரோப்பிய ஒன்றிய இணைப்புத் தொடர்பான ஒரு மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளன.
பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது, ‘பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நீரிழிவு காலக் காப்பீட்டுத் திட்டம் உள்வகை 8 HbA1c’ எனப்படும் ஒரு பிரத்தியேக காலக் காப்பீட்டுத் திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது
இது வகை - 2 நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட முதல் வகையான காப்பீட்டுத் திட்டம் ஆகும்.
ஒடிசா மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவின் (AI) ஆற்றலினை மேம்படுத்துவதற்காக, ‘செயற்கை நுண்ணறிவிற்கான ஒடிசா’ மற்றும் ‘இளைஞருக்கான செயற்கை நுண்ணறிவு’ என்ற இரண்டு முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளது.
76வது உலக சுகாதார சபையின் போது மனித ஆரோக்கியத்தின் மீது, இரசாயனங்கள், கழிவுகள் மற்றும் மாசுபாடு தாக்கம் குறித்த வரைவுத் தீர்மானத்தினை உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர் நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.