TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 8 , 2023 409 days 324 0
  • முரட்டு யானை அரிகொம்பன் சமீபத்தில் பிடிக்கப்பட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கோதையாறு பகுதியை அடுத்து உள்ள முத்துக்குழிவயல் என்ற பகுதியில் விடப்பட்டுள்ளது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷாலினி சிங் என்பவர் இமயமலைப் பகுதியில் மலையேறும் படிப்பை முடித்த முதல் இந்தியத் தேசிய மாணவர் படையின் பெண் உறுப்பினர் என்ற சாதனையைப் படைத்து உள்ளார்.
  • ஜம்மு காஷ்மீரின் பதேர்வா பள்ளத்தாக்கில் இரண்டு நாள் "லாவெண்டர் திருவிழா" தொடங்கப் பட்டுள்ளது.
  • ஐநா பொதுச் சபையானது (UNGA) அதன் 78வது அமர்வின் தலைவராக டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் ஐநாவிற்கான ஒரு நிரந்தரப் பிரதிநிதியான டென்னிஸ் பிரான்சிஸைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • ஐக்கிய அரபு அமீகரத்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல்லா அல் மண்டூஸ் உலக வானிலை அமைப்பின் (WMO) புதிய தலைவராக 2023  ஆம் ஆண்டு  முதல் 2027 ஆம் ஆண்டு  வரை நான்கு ஆண்டு காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்