TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 9 , 2023 407 days 263 0
  • ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வனவிலங்குக் காப்பாளர் மற்றும் மாவட்ட வனத் துறை அதிகாரியான ஜெகதீஷ் பாக்கன் என்பவர் 2023 ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உயிர்க்கோளக் காப்பக மேலாண்மைக்கான மைக்கேல் பாட்டிஸ் என்ற விருதை வென்றுள்ளார்.
  • தி இந்து குரூப் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக நிர்மலா லட்சுமண் என்பவர் ஒருமனதாக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவிலுக்கு அருகே உள்ள பாண்டியன் கோட்டையில் கீறல் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு சுரினாம் நாட்டின் ஒரு உயரியக் குடிமை விருதான கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆஃப் தி யெல்லோ ஸ்டார் என்ற விருது ஆனது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
    • இது சுரினாம் குடியரசு நாட்டின் மிகவும் மதிப்பு மிக்க அரசு விருது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்