தேசிய மருத்துவ ஆணையமானது சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிற்கு அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மறைந்த முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுத் தமிழகத்தின் நெடுஞ்சாலையோரங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவானது (MPC) பணப்புழக்கச் சீரமைப்பு வசதியின் (LAF) கீழான கொள்கை சார் ரெப்போ வட்டி விகிதத்தினை மாற்றாமல் 6.50% ஆகவே வைத்திருக்க முடிவு செய்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகமானது, 2004 ஆம் ஆண்டு சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தின் கீழான திருத்தப்பட்ட சில விதிகளை அறிவித்ததன் மூலம், OTT தளங்களில் புகையிலைப் பயன்பாடு எதிர்ப்பு சார்ந்த ஒரு எச்சரிக்கை வெளியீடுகளை ஒழுங்குமுறைப் படுத்திய உலகின் முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது.
மகாரஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி என்ற தாலுக்காவில், கார்பன் நடுநிலைத் தன்மை கொண்ட இந்தியாவின் முதல் கிராமமானது உருவாக்கப் பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே முதன்முறையாக லித்தியம்-அயனி வகை மின்கலங்களை உற்பத்தி செய்வதற்காக கிகா-தொழிற்சாலை (மின்சார வாகனங்களுக்கான மின்கலங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் ஒரு ஆலை) ரகத்திலான முதல் தொழிற்சாலையானது குஜராத்தில் தொடங்கப்பட உள்ளது.