நாக்பூர் அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனமானது, மதிப்புமிக்க மருத்துவ மனைகள் மற்றும் சுகாதார நலச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரத்தினைப் பெற்ற நாட்டின் முதல் அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனமாக மாறியுள்ளது.
G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக சுகாதார பணிக் குழுவின் 3வது கூட்டம் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது.
‘கழிவுகளை மதிப்புள்ளவையாக மாற்றுதல்' முன்னெடுப்பினை விரிவுபடுத்துவதற்காக சாகர் சம்ரித்தி எனப்படும் இயங்கலை வழியான ஒரு தூர்வாரல் பணிக் கண்காணிப்பு அமைப்பானது தொடங்கப் பட்டுள்ளது.
இது துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டது.
இந்தியா, பிரான்சு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தங்களின் மூன்று கடற்படைகளுக்கு இடையே முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட முத்தரப்புக் கடல்சார் கூட்டுப் பயிற்சியை ஓமன் வளைகுடாவில் நிறைவு செய்துள்ளன.
மகாராஷ்டிரா மாநில அரசானது ஆசியாவின் மிகப்பெரிய, மிகவும் உயர் இலட்சிய மிக்க மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினைத் தானே நகரில் தொடங்கியுள்ளது.
இந்த மறுவடிவமைக்கப்பட்ட நகரமைப்புப் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய சுகாதார மையம், கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, வாகன நிறுத்தம், மண்டி மற்றும் குடிமை வசதி அமைப்புகள் ஆகியவை உள்ளன.