TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 13 , 2023 403 days 254 0
  • நாக்பூர் அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனமானது, மதிப்புமிக்க மருத்துவ மனைகள் மற்றும் சுகாதார நலச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரத்தினைப் பெற்ற நாட்டின் முதல் அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனமாக மாறியுள்ளது.
  • G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக சுகாதார பணிக் குழுவின் 3வது கூட்டம் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது.
  • ‘கழிவுகளை மதிப்புள்ளவையாக மாற்றுதல்' முன்னெடுப்பினை விரிவுபடுத்துவதற்காக சாகர் சம்ரித்தி எனப்படும் இயங்கலை வழியான ஒரு தூர்வாரல் பணிக் கண்காணிப்பு அமைப்பானது தொடங்கப் பட்டுள்ளது.
    • இது துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டது.
  • இந்தியா, பிரான்சு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தங்களின் மூன்று கடற்படைகளுக்கு இடையே முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட முத்தரப்புக் கடல்சார் கூட்டுப் பயிற்சியை ஓமன் வளைகுடாவில் நிறைவு செய்துள்ளன.
  • மகாராஷ்டிரா மாநில அரசானது ஆசியாவின் மிகப்பெரிய,  மிகவும் உயர் இலட்சிய மிக்க மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினைத் தானே நகரில் தொடங்கியுள்ளது.
    • இந்த மறுவடிவமைக்கப்பட்ட நகரமைப்புப் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய சுகாதார மையம், கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, வாகன நிறுத்தம், மண்டி மற்றும் குடிமை வசதி அமைப்புகள் ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்