தருமபுரி மாவட்டத்தில் உள்ள பூதிநத்தம் கிராமத்தில் புதியக் கற்காலத்தைச் சேர்ந்த கோடாரிக் கருவி ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
2022 ஆம் நிதியாண்டில் 11,955 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகக் கழகத்தின் நிகர இழப்பு ஆனது 2023 ஆம் நிதியாண்டில் 5,523 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமானது, ஒரு ஆரோக்கியமான மற்றும் அடிமையாதல் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான "அடிமையாதல் இல்லாத அம்ரித் கால்" என்ற ஒரு தேசியப் பிரச்சாரத்தினைத் தொடங்கியுள்ளது.
இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் புதியத் தலைமை இயக்குநராக ஜனார்த்தன் பிரசாத் நியமிக்கப் பட்டுள்ளார்.
மெட்டா நிறுவனம் மற்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து அம்ரித் தலைமுறை எனும் ஒரு பிரச்சாரத்தினைத் தொடங்கியுள்ளன.
இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் ரீல்கள் எனப்படும் சில காட்சிகளை உருவாக்குவதன் மூலம் அவர்களின் படைப்பாற்றலை வெளிப் படுத்தவும், அவர்களின் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும் நாடு முழுவதிலும் உள்ள 16 முதல் 18 வயதுடையவர்களுக்கு இது அழைப்பு விடுத்தது.
இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளின் கடற்படைகள் ஆறாவது ஏகதா என்றப் பயிற்சியினை மேற்கொண்டன.
லண்டனில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணியினை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.