நைனிடால் மாவட்டத்தில் உள்ள கௌலா ஆற்றில் ஜூன் 30 ஆம் தேதி வரை மணல் அள்ளும் பணிகளைத் தொடரச் செய்வதற்கு உத்தரகாண்ட் மாநில அரசிற்கு ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் M. ஷகீல் அக்தர் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையின் முன்னாள் கூடுதல் தலைமை இயக்குநரான P. தாமரைக் கண்ணன், R. பிரியகுமார், டாக்டர் K. திருமலைமுத்து மற்றும் டாக்டர் M. செல்வராஜ் ஆகியோர் மாநிலத் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.