TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 16 , 2023 400 days 258 0
  • உயர்நிலைத் தணிக்கை நிறுவனங்கள்-20 (SAI20) என்பதின் ஈடுபாட்டுக் குழுவின் உச்சி மாநாடானது கோவாவில் நடைபெற உள்ளது.
  • இந்தியாவின் சில்லறைப் பணவீக்கமானது 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.25 சதவீதமாகக் குறைந்தது.
  • பழங்குடியின எழுத்தாளர்களின் முதல் தேசிய மாநாடானது ஜம்மு காஷ்மீரில் நடத்தப் பட்டது.
  • "When Climate Change Turns Violent" என்ற தலைப்பிலான ஓர் இந்திய ஆவணப்படமானது உலக சுகாதார அமைப்பின் 4வது வருடாந்திரமான அனைவருக்குமானச் சுகாதாரம் என்ற ஒரு திரைப்பட விழாவில் (HAFF) 'அனைவருக்குமான சுகாதாரம்' பிரிவில் சிறப்புப் பரிசை வென்றுள்ளது.
  • இந்திய ஹாக்கி அணி ஜப்பானில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொரியக் குடியரசை வீழ்த்தி தனது முதல் மகளிர் ஜூனியர் ஹாக்கி ஆசியக் கோப்பை 2023 பட்டத்தை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்