TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 17 , 2023 399 days 271 0
  • வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியக் கல்லூரிக்கு (தன்னாட்சி ஆளுமை) சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (TNPCB) பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அருகே உள்ள பெருமுகை என்னுமிடத்தில் இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் 250 படுக்கைகள் கொண்ட கலைஞர் நினைவு நூற்றாண்டுத் தங்கும் விடுதியைத் தமிழக அரசு கட்டமைக்க உள்ளது.
  • சென்னையில் கிண்டியில் அமைக்கப் பட்டுள்ள 1,000 படுக்கைகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டுப் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையினைத் தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
    • இது சென்னை ஓமந்தூராரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அடுத்த இரண்டாவது பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனை ஆகும்.
  • W20 உச்சி மாநாடானது மாற்றம், செழிப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கான பெண்கள் தலைமையிலான மேம்பாடு என்ற கருத்துருவுடன் மகாபலிபுரத்தில் நடத்தப் பட்டது.
  • எல்லைப் பாதுகாப்புப் படையின் புதியத் தலைமை இயக்குநராக நிதின் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்