TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 19 , 2023 397 days 236 0
  • டெல்லியில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கம் என்ற பெயரானது, 'பிரதமர்' அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கம் என்று மாற்றப் பட்டுள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்துள்ள நாடாக சிங்கப்பூர் உருவெடுத்துள்ள நிலையில், அதைத் தொடர்ந்து மொரீஷியஸ், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
  • பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது சர்வதேசச் சமூகப் பாதுகாப்புச் சங்கத்தின் (ISSA) துணை உறுப்பினர் அந்தஸ்தினைப் பெற்றுச் சர்வதேச அங்கீகாரத்தினைப் பெற உள்ளது.
  • இந்தியக் கடற்படையின் போர்க் கப்பலான ஐஎன்எஸ் சாத்புரா, இந்தோனேசியாவின் மகஸ்ஸர் என்னுமிடத்தில் நடைபெற்ற கொமோடோ எனப்படும் 4வது பலதரப்புக் கடற் படைப் பயிற்சியில் பங்கேற்றது.
  • அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் வீட்டில் இருப்பதற்காகவும், மகிழ்ச்சியானச் சுற்றுலா அனுபவத்திற்காக வேண்டி வெளிப்புறப் பகுதிகளில் கூடி மகிழும் சிறந்தச் சந்தர்ப்பத்தினை வழங்குவதற்காகவும் ஜூன் 18 ஆம் தேதியன்று சர்வதேசக் குடும்பச் சுற்றுலாத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • தந்தையின் அன்பு மற்றும் அவரது தியாகத்திற்கு மரியாதை அளிக்கும் விதமாக ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையன்றுத் தந்தையர் தினம் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்