TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 21 , 2023 395 days 269 0
  • 2023 ஆம் ஆண்டு லண்டனின் மத்திய வங்கி விருதுகள் விழாவில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான சக்தி காந்த தாஸ் 'ஆண்டின் சிறந்த ஆளுநர்' விருதைப் பெற்று உள்ளார்.
  • கௌகாத்தியில் அமைந்துள்ள ஜெட்விங்ஸ் ஏர்வேஸ் என்ற ஒரு விமானச் சேவை நிறுவனமானது, இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளுக்கு பிராந்திய விமானச் சேவையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
  • சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர், ஜகார்த்தாவில் நடைபெற்ற பேட்மிண்டன் சூப்பர் 1000 போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்திய இரட்டையர் இணையர் என்ற சாதனையைப் படைத்துள்ளனர்.
  • தமிழ்நாட்டில் சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நடைபெற்ற உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பின் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் மலேசியா அணியினை வீழ்த்தி எகிப்து அணி சாம்பியன் பட்டத்தினை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்