TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 24 , 2023 392 days 228 0
  • மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகமானது, வங்கக் கடலில் கலைஞர் பேனா நினைவுச் சின்னத்தினை அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு 15 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியினை வழங்குவதற்குக் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கு (CRZ) அனுமதி வழங்கியுள்ளது.
  • இராஜாஜி, காமராஜர், கருணாநிதி ஆகிய மூன்று முதல்வர்களுடன் பணியாற்றிய தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் P. சபாநாயகம் (100) சமீபத்தில் சென்னையில் காலமானார்.
  • சர்வதேச யோகா தினத்தன்று கில்தான், சென்னை, ஷிவாலிக், சுனைனா, திரிசூல், தர்காஷ், வகிர், சுமித்ரா மற்றும் பிரம்மபுத்ரா போன்ற இந்தியக் கடற்படைக் கப்பல்களில் 'ஓஷன் ரிங் ஆஃப் யோகா' எனப்படும் கப்பல்களில் மேற்கொள்ளப்படும் ஒரு யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கொச்சியில் உள்ள தெற்குக் கடற்படைக் கட்டுப்பாட்டுப் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள, ‘துருவ்’ எனப்படும் ஒருங்கிணைந்த மாதிரியாக்கப் பயிற்சி வளாகத்தினைத் திறந்து வைத்தார்.
    • வழிசெலுத்தல், கடற்படைச் செயல்பாடுகள் மற்றும் கடற்படை உத்திகள் ஆகியவற்றின் நிகழ்நேர அனுபவத்தை வழங்கும் நோக்கில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • சர்வதேச ஒலிம்பிக் குழுவானது (IOC), 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் முறையாக நடைபெறுவதனை உறுதி செய்வதில் மகத்தானப் பங்கினை ஆற்றியதற்காக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரெயெசுசிற்கு ஒலிம்பிக் ஆர்டர் என்ற விருதினை வழங்கியது.
  • சர்வதேச ஒலிம்பிக் தினம் ஆனது ஜூன் 23 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்