10,000க்கும் மேற்பட்ட ஆரம்ப நிலை சுகாதார நிலையங்கள் மூலம் இதய நோய்க்கான மருந்துகள் வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாக (ஜூன் 27) இந்தியாவில் 33 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
மாநிலங்களுக்கான ஒரு மூலதன முதலீட்டுச் சிறப்பு உதவித் திட்டத்தின் (2023-24) கீழ் சுமார் 56,415 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது 16 மாநிலங்களில் உள்ள பல்வேறு துறைகளின் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமர் ஐந்து புதிய வந்தே பாரத் விரைவு ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அவை ராணி கமலாபதி-ஜபல்பூர் வந்தே பாரத் விரைவு வண்டி, கஜுராஹோ-போபால்-இந்தூர் வந்தே பாரத் விரைவு வண்டி, மட்கான் (கோவா)-மும்பை வந்தே பாரத் விரைவு வண்டி, தார்வாட்-பெங்களூரு வந்தே பாரத் விரைவு வண்டி மற்றும் ஹதியா-பாட்னா வந்தே பாரத் விரைவு வண்டி ஆகியவை ஆகும்.