NLC இந்தியா லிமிடெட் நிறுவனமானது, இணையவழிச் சந்தை நடைமுறைகளின் நம்பகத் தன்மையை மேம்படுத்தச் செய்வதில் அதன் பங்களிப்பிற்காக 2023 ஆம் ஆண்டிற்கான ‘சரியான நேரத்தில் பண வழங்கீடு (CPSE)’ விருதினைப் பெற்றுள்ளது.
மதராசின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது (IIT-M) தான்சானியாவின் சான்சிபார் நகரில் அமைக்கப்பட்டுள்ள தனது முதல் சர்வதேச வளாகத்தினைத் திறக்க உள்ளது.
இந்தியக் கடற்படை மற்றும் அமெரிக்கக் கடற்படை ஆகியவை இணைந்து SALVEX என்று அழைக்கப்படும் 7வது IN-USN சால்வேஜ் மற்றும் வெடிபொருள் ஆயுதங்களைக் கையாளுதல் (EOD) பயிற்சியினை மேற்கொண்டன.
இந்தூர் மாநகராட்சிக் கழகமானது (IMC), தடை செய்யப்பட்ட மற்றும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பொருட்களைக் கையகப்படுத்தி, அவற்றை மறு சுழற்சி செய்ததன் மூலம், விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் பொறுப்பு (EPR) மீதான அங்கீகார மதிப்பினைப் பெற்ற நாட்டின் முதல் நகர்ப்புற அமைப்பாக மாறி உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 07 ஆம் தேதியன்று, உலகம் முழுவதும் உலக சாக்லேட் தினம் கொண்டாடப் படுகிறது.
உலக மன்னிப்புத் தினமானது உலகளவில் ஜூலை 07 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
உலக கிஸ்வாஹிலி மொழி தினமானது ஜூலை 07 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகிறது.
கிஸ்வாஹிலி என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவியத் தொலைதொடர்பு இயக்குநரகத்தில் உள்ள ஒரே ஆப்பிரிக்க மொழியாகும்.