TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 11 , 2023 375 days 290 0
  • உலக நெருக்கடிக் கால நடவடிக்கைக் குழுமத்தின் சாம்பியன்ஸ் குழுவில் சமீபத்தில் இந்தியா இணைந்துள்ளது.
    • இது 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மிகவும் அவசரமான உலகளாவிய விவகாரங்களான உணவுப் பாதுகாப்பு, ஆற்றல் மற்றும் நிதி போன்றவைகளின் மீது  கவனம் செலுத்துவதற்காக என்று தொடங்கப் பட்டது.
  • ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் உள்ள பாபா பைத்யநாத் தம் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ஷ்ரவாணி மேளா தொடங்கப் பட்டது.
  • பிரமல் ஃபைனான்ஸ் நிறுவனம் ஆனது, கொச்சியில் உள்ள திருப்புனித்துராவில் நாட்டிலேயே முதல்முறையாக முழுவதும் பெண்களால் இயக்கப்படும் “மைத்ரேயி” எனப்படும் தனது கிளையினைத் தொடங்கியுள்ளது.
  • அகமதாபாத் நகரமானது நகர்ப்புறம் 20 (U20) மேயர் உச்சி மாநாட்டினை நடத்தியது.
  • தேசிய இணையவெளி ஒருங்கிணைப்பு மையம் ஆனது, லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் ராஜேஷ் பந்திற்குப் பதிலாக லெப்டினன்ட் ஜெனரல் M.U. நாயரை புதிய தேசிய இணையவெளிப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தலைவரான சீனாவினைச் சேர்ந்த கு டோங்யு, ஐக்கிய நாடுகளின்  அமைப்பின் தலைவராக இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆனது மூத்த ஆடவர் கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக அஜித் அகர்கரை நியமித்துள்ளது.
  • சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயங்கா பாட்டீல் மகளிர் கரீபியன் பிரீமியர் லீக் (WCPL) போட்டிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
    • பாட்டீல், சர்வதேசப் போட்டியில் அறிமுகமாகும் முன் வெளிநாட்டு லீக் போட்டியில்  பங்கேற்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்திய வீரரும் ஆவார்.
  • இந்திய ஆடவர் கால்பந்து அணியானது குவைத் அணியினை வீழ்த்தி பெங்களுருவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு SAFF சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றது.
  • நெதர்லாந்து அணியானது, தொடர்ந்து இரண்டாவது முறையாக FIH ஹாக்கி ப்ரோ லீக் போட்டியினை வென்ற முதல் அணி என்ற பெருமையினைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்