TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 20 , 2018 2191 days 696 0
  • புதுச்சேரி சுற்றுலாத்துறை தனது முதல் பாண்டிச்சேரி சர்வதேச திரைப்பட விழாவினை (Pondicherry International Film Festival - PIFF) அறிவித்துள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 100 திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும். PIFF-ன் தொடக்கப் பதிப்பு செப்டம்பர் 26 லிருந்து 30 வரை நடைபெறும்.
    • பிரான்சு இந்த விழாவின் பங்குதாரர் நாடாகும். இதில் பிரான்சு திரைப்படங்கள், கலை மற்றும் பண்பாடு மீதான சிறப்பு கவனங்கள் செலுத்தப்படும்.
  • மேற்கு ரயில்வே, மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் சாலை புறநகர் ரயில்வே நிலையத்தினை பிரபாவதி ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. பிரபாவதி ரயில் நிலையத்தின் குறியீடு PBHD ஆக இருக்கும். 1853லிருந்து 1860 வரையிலான கால கட்டத்தில் பம்பாய் மாகாணத்தின் ஆளுநராக இருந்த எல்பின்ஸ்டோனின் நினைவாக இந்த நிலையத்திற்கு ஆரம்பத்தில் இப்பெயரிடப்பட்டது.
    • உள்ளூர் தெய்வமான பிரபாவதிக்கு கௌரவம் செலுத்தும் வகையில் இந்த நிலையம் தற்பொழுது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் சுயஉதவிக் குழுக்களின் இணைப்புக்கு சிறந்த சேவையை வழங்கியதற்காக ரெப்கோ வங்கியினால் நிர்வகிக்கப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனமான ரெப்கோ மைக்ரோ நிதி நிறுவனம், நபார்டு 2018 விருதினைப் பெற்றுள்ளது.
  • சாகித்ய அகாடமியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டின் முதல் திருநங்கை கவிஞர்களுக்கான சந்திப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த சந்திப்பு இந்தியாவின் முதல் திருநங்கை கல்லூரி முதல்வர் மாநபி பந்தோபத்யாயினால் தலைமை தாங்கப்பட்டது.
  • நெல்சன் மண்டேலா பவுண்டேஷன் இந்த ஆண்டின் நெல்சன் மண்டேலா தினத்தினை வறுமைக்கு எதிரான நடவடிக்கைகள், நெல்சன் மண்டேலாவின் தலைமை மற்றும் வறுமையை எதிர்த்து போராடுதல் மற்றும் அனைவருக்கும் சமூக நீதியை வழங்குதல் ஆகியவற்றுக்காக அர்ப்பணித்துள்ளது.
  • சமஸ்கிருத மொழியினை மேம்படுத்துவதற்காக குஜராத் அரசு சமஸ்கிருத பாஷா விகாஸ் கழகத்தினை நிறுவ முடிவெடுத்துள்ளது.
  • இந்தோ-அமெரிக்க பாதுகாப்பு கூட்டுறவின் ஒரு பகுதியாக 7வது பாதுகாப்பு தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முயற்சியின் (Defence Technology and Trade Initiative - DTTI) சந்திப்பு இந்திய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் குழுக்களிடையே நடைபெற்றது.
    • DTTI, இரண்டு நாடுகளுக்கிடையேயான 2 + 2 பேச்சுவார்த்தையில் முன்னிலை வகிக்கும் ஒரு முக்கிய மன்றம் ஆகும்.
  • அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்களின் முதல் நேரடி சந்திப்பு பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியில் நடைபெற்றது.
  • இந்தியா-ஓமன் கூட்டுக்குழு சந்திப்பின் எட்டாவது கூட்டத்தொடர் ஓமனில் உள்ள மஸ்கட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரின் இணைத் தலைவராக ஓமனின் மத்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பாபுவும் அவருடன் ஓமனின் மத்திய தொழிற்சாலை, முதலீடு, வர்த்தக மற்றும் இலக்கமுறை பொருளாதார அமைச்சர் டாக்டர்.அலி பின் மவுசத் அலி சுனைதியும் தலைமை வகித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்