TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 17 , 2023 369 days 242 0
  • டாடா மோட்டார் நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம், சமீபத்திய உற்பத்தித் தொழில்நுட்பங்களில் இளையோர்களின் திறனை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் 22 தொழில்துறை 4.0 தொழில்நுட்ப மையங்களைத் தொடங்கியுள்ளது.
  • ஆசியாவின் மிகப் பழமையானப் பங்குச் சந்தையான மும்பை பங்குச் சந்தை, அதன் 149வது உருவாக்கத் தினத்தின் போது (2023 ஜூலை 10) அதன் புதிய இலச்சினையை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • பிரான்சு நாட்டிடம் இருந்து, விமானந்தாங்கிக் கப்பல்களிலிருந்து இயக்கப் படும் வகையிலான 26 ரஃபேல்-M ரக போர் விமானங்களையும், மேலும் மூன்று ஸ்கார்பியன் ரக டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் வாங்குவதற்குப் பாதுகாப்பு கொள்முதல் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
  • சர்வதேச கிரிக்கெட் சபையானது, ICC கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெரும் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு சமமானப் பரிசுத் தொகையினை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியாவில் 1.61 லட்சம் கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப் பட்டுள்ளது.
    • சரக்கு மற்றும் சேவை வரியானது அறிமுகப்படுத்தப் பட்டதில் இருந்து நான்காவது முறையாக மொத்தச் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 1.6 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்