கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தினைச் செயல்படுத்த உள்ளதன் மூலம், மேற்கு வங்காளம் (லக்ஷ்மிர் பந்தர்) மற்றும் மத்தியப் பிரதேசம் (லட்லி பஹ்னா யோஜனா) ஆகியவற்றைத் தொடர்ந்து பெண்களுக்கான அடிப்படை வருமானத் திட்டத்தினைக் கொண்ட இந்தியாவின் மூன்றாவது மாநிலமாக தமிழ்நாடு மாற உள்ளது.
டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (IGIA) ஆனது நான்கு விமான ஓடுதளங்களைக் கொண்ட இந்தியாவின் முதல் விமான நிலையம் ஆக மாறியுள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் (ATL) நிறுவனமானது, மின்பரிமாற்றத் துறையில் இன்ஸ்டிடியூட் ஆஃப் டைரக்டர்ஸ் நிறுவனத்தினால் வழங்கப்படும் ‘2023 ஆம் ஆண்டு தங்க மயில் சுற்றுச்சூழல் மேலாண்மை விருதினை’ பெற்றுள்ளது.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமானது, வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் BHARAT (விரைவாக்கப்பட்ட கிராம மற்றும் வேளாண் மாற்றத்தினை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வங்கிகள்) என்ற வங்கிகளுக்கான ஒரு புதிய பிரச்சாரத்தினைத் தொடங்கியுள்ளது.
2023 ஆம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் செக் குடியரசு நாட்டினைச் சேர்ந்த மார்கெட்டா வொன்ட்ரூசோவா துனிசியா நாட்டினைச் சேர்ந்த ஒன்ஸ் ஜபியூரை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை வென்று உள்ளார்.