TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 19 , 2023 367 days 264 0
  • தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான (ULB) தேர்தல்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நோட்டா (அனைவருக்கும் எதிரான வாக்கு) என்ற விருப்பத் தேர்வு இடம் பெற உள்ளது.
  • தான்சானியாவின் சான்சிபார் எனுமிடத்தில் அமையவுள்ளப் புதிய இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின் முதல் பெண் இயக்குநர் ப்ரீத்தி அகாலயம் ஆவார்.
  • அபுதாபியில், டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் முதல் வளாகத்தினை நிறுவச் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது இந்தியக் கல்வி அமைச்சகம் மற்றும் அபுதாபி கல்வித் துறை மற்றும் டெல்லியின் இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை இடையே கையெழுத்தானது.
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் கிராமப்புற வாழ்வாதாரத் திட்டமானது (JKRLM) தங்கப் பிரிவில் “இந்திய ஆளுமை நிலை 2047” என்ற ஒரு கருத்துருவின் கீழ் SKOCH விருதினைப் பெற்று உள்ளது.
  • R. சிதம்பரம் மற்றும் சுரேஷ் கங்கோத்ரா ஆகியோர் “India Rising Memoir of a Scientist” என்றப் புத்தகத்தினை எழுதியுள்ளனர்.
  • நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு (TAC) இணக்கம் தெரிவித்த 51வது நாடாக சவூதி அரேபியா மாறியுள்ளது.
  • HDFC வங்கியுடன் சமீபத்தில் இணைக்கப்பட்ட நிறுவனம், அதன் சந்தை மூலதனம் 154 பில்லியன் டாலராக உயர்ந்ததையடுத்து உலகின் ஏழாவது மதிப்புமிக்க வங்கியாக மாறி உள்ளது.
  • சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேசக் கிரிக்கெட்டில் இந்திய அணியில் அதிக விக்கெட்டுகளை (709) வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை (707) விஞ்சி இரண்டாவது இடத்தினைப் பெற்றுள்ளார்.
  • இந்தியா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளின் இராணுவங்கள் ஆனது, ‘நோமாடிக் எலிஃபெண்ட் 2023’ (நாடோடி யானை) எனப்படும் 15வது கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
    • இது மங்கோலியாவின் உலான்பத்தரில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்