TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 21 , 2023 365 days 210 0
  • ஐஎன்எஸ் சுனைனா கப்பல் ஆனது, செஷெல்ஸ் நகரில் நடைபெற்ற ஆபரேஷன் சதர்ன் ரெடினெஸ் 2023 எனப்படுகின்ற ஒரு பன்னாட்டுக் கடல்சார் பாதுகாப்புப் பயிற்சி நடவடிக்கையில் பங்கேற்றது.
  • இந்திய இராணுவமானது, 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 24வது ஆண்டு நிறைவினை நினைவு கூரும் வகையில் ஆயுத முப்படைகளின் ‘நாரி சாசக்திகரன்’ என்ற மகளிர் மோட்டார் சைக்கிள் பேரணியைத் தொடங்கியது.
  • ஒரு வருடத்திற்கு முன்பு 12.3% ஆக இருந்த இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையானது ஏப்ரல்-மே மாதத்திற்கான வருடாந்திர மதிப்பீட்டில் 11.8% குறைந்து 2.10 டிரில்லியன் ரூபாயாக உள்ளது.
  • G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் மூன்றாவதுச் சந்திப்பானது குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்றது.
  • நிதி ஆயோக் அமைப்பானது, தொழில்நுட்ப-வணிகத் தயார்நிலை மற்றும் சந்தையில் நேரடிப் போட்டியாளர்களின் ஈடுபாட்டு அளவு (TCRM Matrix) என்ற கட்டமைப்பினை அறிமுகப் படுத்தியுள்ளது.
    • இது நாட்டில் தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் எரிபொருள் சார்ந்தப் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்துவதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்