2023 ஆம் ஆண்டு எவரெஸ்ட் சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபை விழாவில் தமிழ்நாட்டின் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் சட்டக் கல்வி மாணவியான ஃபத்மா அல் ஜஹ்ரா சிறந்த விரிவான அறிக்கைக்கான விருதினைப் பெற்றுள்ளார்.
‘Through The Broken Glass: An Autobiography” என்பது இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான T.N. சேஷன் அவர்களால் எழுதப் பட்ட சுயசரிதை ஆகும்.
ஹங்கேரியின் புத்தபெஸ்ட் நகரில் நடைபெற்ற வி கேஷா ஹீடென்யி நினைவு சூப்பர் கிராண்ட்மாஸ்டர் சதுரங்கப் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் R. பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
உலகின் மிகவும் விசுவாசமான நாய் என்று அறியப்படும் ஹச்சிகோ எனும் பெயர் கொண்ட நாய் இந்த ஆண்டு 100 வயதை எட்டுகிறது.
தேசிய மாம்பழத் தினம் ஆனது 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 22 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.