TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 26 , 2023 360 days 250 0
  • பணியாளர்களின் மாநில ஈட்டுறுதிக் காப்பீட்டுக் கழகத்தின் கீழ் செயல்படும் அடல் பீமித் வ்யக்தி கல்யாண் யோஜனா என்ற வேலைவாய்ப்பின்மைக் குறைப்பு என்றத் திட்டத்தினை 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.
  • பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பு, புத்தாக்கம் மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக மலிவு விலையிலான மற்றும் நிலைத்தன்மை மிக்க கட்டிட வசதிகளை மேம்படுத்த முற்படும் வகையிலான நாட்டின் முதல் கட்டுமான புத்தாக்க மையமானது (CIH) கேரளாவில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது 111வது டெஸ்ட் போட்டியில் சர் டான் பிராட்மேனின் சாதனையை (52 டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள்) சமன் (29) செய்து உள்ளார்.
  • எலோன் மஸ்க் “எவ்ரிதிங் செயலியை” உருவாக்கும் நோக்கில், ட்விட்டர் (கீச்சகம்) ஊடகத்தின் பெயரை X என மாற்றி, அதன் புதியச் சின்னத்தினை வெளியிட்டுள்ளார்.
  • சமூகத்திற்கு வெப்பப் பொறியாளர்களின் பங்களிப்பைக் கொண்டாட செய்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 24 ஆம் தேதியன்று அமெரிக்கத் தேசிய வெப்பப் பொறியாளர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்