தமிழகத்தின் முதல் ‘மாநில வேளாண் கண்காட்சி (வேளாண் சங்கமம்)’ திருச்சியில் நடத்தப் பட்டது.
4வது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மைச் செயற்குழு (ECSWG) மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
ஐக்கியப் பேரரசானது, பூர்வீகத் தாவரங்களைப் பாதுகாப்பதற்கான சில திட்டங்களை நிறுவுவதற்கு தமிழ்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.
இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், சுரங்கத் துறை அமைச்சகத்தினால் வழங்கப் படும் மதிப்புமிக்க 2022 ஆம் ஆண்டிற்கான தேசியப் புவிசார் அறிவியல் விருதுகளை (NGA) இருபத்தி இரண்டுப் புவிசார் அறிவியலாளர்களுக்கு வழங்கினார்.
சர்வதேச கடன் அறிக்கையிடல் குழு (ICCR) ஆனது, இஸ்ரேல் வங்கிக்கு உறுப்பினராக அதில் இணைவதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யா சமந்த், இந்தியாவின் 83வது சதுரங்க கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆனது, இந்திய எறிப் பந்தாட்டப் போட்டிச் சங்கத்தினை (HAI) தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பாக (NSF) அங்கீகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது.
5வது ஹெலிகாப்டர் மற்றும் சிறிய ரக விமான உச்சி மாநாடு ஆனது (ஹெலி உச்சி மாநாடு 2023) பொது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தினால் மத்தியப் பிரதேசத்தின் கஜூராஹோவில் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வின் கருத்துரு, “உச்ச வரம்பை அடைவது: ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் மூலமான பிராந்திய இணைப்பு” என்பதாகும்.
உலக இயற்கைப் பாதுகாப்பு தினமானது, ஆண்டுதோறும் ஜூலை 28 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “காடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள்: மக்களின் நல்வாழ்வையும் கிரகத்தின் நல்வாழ்வையும் நிலை நிறுத்துதல்” என்பதாகும்.