TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 30 , 2023 356 days 223 0
  • அமலாக்கத் துறை இயக்குனரகத்தின் (ED) இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.
  • தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் மாதச் சம்பளம், சட்டசபை கூட்டத் தொடரின் போது ஒவ்வொரு நாளும் செலுத்தப்படும் அமர்வுக் கட்டணம் தவிர்த்து, 1.05 லட்சம் ரூபாய் ஆகும்.
    • ஆனால், அமைச்சர் பதவிக்கு உயர்த்தப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மாதச் சம்பளம் 76,800 ரூபாய் மட்டுமே ஆகும்.
  • மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பெருநிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அதிக அளவு கடன் வழங்கிய பொதுத்துறை வங்கிகளின் பட்டியலில் கனரா வங்கி தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் கடந்த ஒன்பது நிதியாண்டுகளில் மொத்தமாக 10,16,617 கோடி ரூபாய் கடன் தொகைகளை மீட்டெடுத்துள்ளன.
  • அடுத்த ஆண்டில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாட்டு  அணிகள் தகுதி பெற்றுள்ளன.
  • 8வது இந்திய-ஆஸ்திரேலியப் பாதுகாப்புக் கொள்கைப் பேச்சு வார்த்தை (DPT) ஆனது ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் நடைபெற்றது.
  • 2011 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 30 ஆம் தேதியன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்