அமலாக்கத் துறை இயக்குனரகத்தின் (ED) இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் மாதச் சம்பளம், சட்டசபை கூட்டத் தொடரின் போது ஒவ்வொரு நாளும் செலுத்தப்படும் அமர்வுக் கட்டணம் தவிர்த்து, 1.05 லட்சம் ரூபாய் ஆகும்.
ஆனால், அமைச்சர் பதவிக்கு உயர்த்தப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மாதச் சம்பளம் 76,800 ரூபாய் மட்டுமே ஆகும்.
மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பெருநிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அதிக அளவு கடன் வழங்கிய பொதுத்துறை வங்கிகளின் பட்டியலில் கனரா வங்கி தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவின் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் கடந்த ஒன்பது நிதியாண்டுகளில் மொத்தமாக 10,16,617 கோடி ரூபாய் கடன் தொகைகளை மீட்டெடுத்துள்ளன.
அடுத்த ஆண்டில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாட்டு அணிகள் தகுதி பெற்றுள்ளன.
8வது இந்திய-ஆஸ்திரேலியப் பாதுகாப்புக் கொள்கைப் பேச்சு வார்த்தை (DPT) ஆனது ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் நடைபெற்றது.
2011 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 30 ஆம் தேதியன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.