சிறந்தத் தமிழ் அறிஞர்களைக் கௌரவிப்பதற்காக தமிழக அரசினால் உருவாக்கப் பட்டு, ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘தகைச்சால் தமிழர்’ என்ற விருதானது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்திய மகளிர் ஹாக்கி அணியானது, பார்சிலோனாவின் டெராசா நகரில் நடைபெற்ற மூன்று நாடுகளின் டோர்னியோ டெல் சென்டெனாரியோ 2023 போட்டியில் அப்போட்டியினை நடத்திய ஸ்பெயின் நாட்டு அணியைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கடற்கரை ஒன்றில் கரை ஒதுங்கிய மர்மப் பொருள் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ஏவூர்தியின் எஞ்சிய பாகங்கள் தான் என ஆஸ்திரேலியாவின் விண்வெளி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
உலக நுரையீரல் புற்றுநோய் தினம் ஆனது, அந்நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நோயைப் பற்றி பரவும் தவறானத் தகவல்களை அகற்றவும் அது பற்றிய கூடுதல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 01 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.