ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான மகாராஷ்டிராவின் தலேகான் ஆலையில் அடையாளம் காணப்பட்ட சொத்துக்களை கையகப் படுத்தச் செய்வதற்கான ஒரு சொத்துக் கொள்முதல் ஒப்பந்தத்தில் (APA) ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சீகூர் பீடபூமியில் அறிவிக்கப்பட்ட யானை வழித்தடத்தில் உள்ள அனைத்துத் தனியார் காடுகளையும் கையகப் படுத்துமாறு மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளில் இரயில் சேவை உள்கட்டமைப்பை நன்கு மேம்படுத்துவதற்காகவும், அங்கு ரயில் சேவை இணைப்பை மேம்படுத்துவதற்காகவும் “ஜன்ஜாதியா கௌரவ் வழித்தடம்” என்ற திட்டம் ஆனது தொடங்கப் பட்டுள்ளது.
கர்நாடக அரசானது, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 200 அலகு வரை இலவச மின்சாரம் வழங்கும் வகையிலான கிருஹ ஜோதி இலவச மின் வழங்கீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.