TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 24 , 2023 460 days 234 0
  • மத்தியச் சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா, 2023, மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா, 2023 ஆகிய மசோதாக்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • தற்போது ஜோர்டானின் அம்மானில் நடைபெற்று வரும் 20 வயதிற்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிரியா மாலிக் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியின் 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிப் பிரிவில் இந்தியாவின் அனாஹத் சிங் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • முதியோர்கள் மேற்கொண்ட பல முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளைக் கௌரவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று உலக முதியோர் தினமாகக் கடைபிடிக்கப் படுகிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று, சமயம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலான வன்முறைச் செயல்களால் பாதிக்கப் பட்டவர்களை நினைவு கூரும் சர்வதேச தினம் ஆனது அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்