TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 25 , 2023 330 days 192 0
  • தேசிய மதிப்பாய்வு மற்றும் அங்கீகாரச் சபையானது (NAAC) அதன் சமீபத்திய மதிப்பீட்டில், அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு 4 மதிப்பில் 3.54 (A++) மதிப்பீட்டினை வழங்கியுள்ளது.
  • மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CMERI) ஆனது, CSIR Prima ET11 எனப்படுகின்ற உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது மின்சார இழுவை வாகனத்தினை (டிராக்டர்) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஸ்ரீநகர் துலிப் தோட்டமானது ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமாக உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
    • இது 68 வகைகளைச் சேர்ந்த 1.6 மில்லியன் துலிப் மலர்களைக் காட்சிப்படுத்தியது.
  • வேகோவி எனப்படும் எடை இழப்பிற்கு உதவும் மருந்தானது மாரடைப்பு, பக்கவாதம் அல்லது இதயம் தொடர்பான ஏற்படும் உயிரிழப்பு அபாயத்தினை 20% குறைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்