காலனித்துவ ஆட்சிக் காலத்தில் 1926 முதல் 1930 ஆம் ஆண்டு வரையில் அப்போதைய மதராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்த P. சுப்பராயன் அவர்களின் சிலையை தமிழக முதல்வர் அவர்கள் சென்னையில் திறந்து வைத்தார்.
கோஹரென்ட் கார்ப் எனப்படும் அமெரிக்க ஒளியிழைப் பொருட்கள் மற்றும் குறைக் கடத்திகள் உற்பத்தி நிறுவனமானது, வழிகாட்டுதல் - தமிழ்நாடு மற்றும் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சிப் பூங்கா ஆகியவற்றுடன் ஒரு முத்தரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
டாடா எஃகு நிறுவனத்தினால் கொல்கத்தாவில் நடத்தப்படும் சதுரங்கம் - இந்தியா போட்டியின் அதிவிரைவுப் போட்டியின் மகளிர் பிரிவில் திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்றுள்ளார்.
காக்னிசன்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் நம்பியாரைத் தனது புதிய தலைவராக நியமிப்பதாக நாஸ்காம் அமைப்பு அறிவித்து உள்ளது.
டானியல் மெக்ககே, ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024 அமெரிக்காஸ் போட்டியின் தகுதிச் சுற்றில் பங்கேற்க உள்ளதையடுத்து கனடா நாட்டின் சார்பாக இந்த சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநர் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையினைப் பெற உள்ளார்.