TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 21 , 2023 303 days 241 0
  • ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா அமெரிக்காவின் யூஜின் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் 83.80 மீட்டர் தொலைவு வரை ஈட்டி எறிந்து அந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தினைப் பெற்றுள்ளார்.
  • நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள நர்லாபூரில் பாலமுரு-ரங்காரெட்டி நீரேற்றுப் பாசனத் திட்டத்தினைத் தெலுங்கானா முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் G20 நாடுகளின் நிலையான நிதிச் செயற்குழுவின் (SFWG) நான்காவது மற்றும் இறுதிக் கூட்டம் ஆனது உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி நகரில் நடைபெற்றது.
  • சர்வதேசக் கடலோரத் தூய்மைப்படுத்துதல் தினமானது, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையன்று (செப்டம்பர் 16, 2023) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • 1995 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 19 ஆம் தேதி சர்வதேச கடற்கொள்ளையர் போன்ற உரையாடல் தினம் கடைபிடிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்