பிரதமர் தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் அமைக்கப்பட உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்தியாவில் உள்ள கலங்கரை விளக்கங்களைச் சுற்றுலா தலங்களாக மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவின் முதல் கலங்கரை விளக்க விழாவை கோவாவில் மத்திய அரசு தொடங்கியது.
பிரான்சு நாட்டின் கதிர் வீச்சுக் கண்காணிப்பு நிறுவனமானது ஆப்பிள் ஐபோன் 12 வகையின் சோதனை முடிவுகளில், அது ஐரோப்பியக் கதிர்வீச்சு வெளிப்பாடு வரம்புகளை மீறியதாகக் கண்டறியப் பட்டதையடுத்து அதன் விற்பனையைத் தடை செய்துள்ளது.