GST தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கும் வரிகளின் வட்டி விகிதங்களை கணக்கிடுவதற்கும் தமிழ்நாட்டின் வணிக வரித்துறை புதிய கைபேசிச் செயலியான TNCTD - GSTயினை தொடங்கியுள்ளது.
மாநில சட்டசபையான விதான சௌதாவினுள் ஊடக ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது எனும் உத்தரவினை கர்நாடக அரசு அளித்துள்ளது. கர்நாடக மாநில சட்டசபையில் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
சுந்தர்கர் மாவட்டத்தில் 5,800 ஹெக்டேர்கள் வேளாண் நிலப்பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதியை வழங்கும் 300 கோடி ரூபாய் திட்டமான ருக்குரா நடுத்தர நீர்ப்பாசன அணைத் திட்டத்தினை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார்.