இந்திய - வியட்நாம் பொருளாதார தொடர்புகளுக்கான சர்வதேச மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது. வியட்நாமுடனான பொருளாதார உறவுகளை அதிகரிக்கச் செய்வது மற்றும் அரசின் கிழக்கு நோக்கிய கொள்கைகளை செயல்படுத்துவது ஆகியன இதன் முக்கிய நோக்கங்களாகும்.
துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.பல்கலைக்கழகத்தின் பார்வையாளர் பதவியில் உள்ள குடியரசுத் தலைவரால் இந்நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. வேந்தரின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும்.
இந்திய – UK (ஐக்கியப் பேரரசு) அறிவியல் மற்றும் புத்தாக்க கழகத்தின் 6வது சந்திப்பு புது தில்லியில் நடைபெற்றது. இதில் இரண்டு நாடுகளுக்கிடையேயான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஒத்துழைப்புகளுக்கான வெவ்வேறு வித பிரச்சினைகள் விவாதிக்கப்படும்.