TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 21 , 2023 401 days 266 0
  • தமிழ்நாடு அரசின் Guidance எனப்படும் முதலீட்டு ஊக்குவிப்பிற்கான தலைமை முகமைக்கு, மதிப்புமிக்க ஐக்கிய நாடுகள் சபையின் ஊக்குவிப்பு விருது (2023) வழங்கப் பட்டுள்ளது.
    • அபுதாபியில் நடைபெற்ற 8வது உலக முதலீட்டு மன்றத்தில் ஆற்றல் மாற்ற முதலீடுகளை உயர்த்தியதில் சிறந்து விளங்கியதற்காக இது வழங்கப் பட்டது.
  • அரிந்தம் பாக்சி என்பவர் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் அடுத்த தூதுவராக/நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • சர்வதேச ஒலிம்பிக் குழுவானது (IOC) மனித உரிமைகள் சார்ந்த தனது முதன்மை உறுதிப்பாடுகளை வலுப்படுத்துவதற்காக ஒலிம்பிக் சாசனத்தில் திருத்தம் செய்து உள்ளது.
  • இத்தாலியின் சர்டினியா நகரில் நடைபெற்ற FIDE உலக இளையோர் சதுரங்க விரைவுச் சுற்று சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஸ்டிராவின் கிராண்ட் மாஸ்டர் ரவுனக் சத்வானி வெற்றி பெற்றுள்ளார்.
  • 20 பேர் அடங்கிய மலையேறும் வீரர் குழுவினர், நாட்டின் மிக உயர்ந்த மலை உச்சிகளை அடைந்து சாதனையை படைத்துள்ளனர்.
    • இது "ஹர் ஷிகர் திரங்கா" என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மலைச் சிகரத்தின் உச்சியிலும் தேசியக் கொடியை ஏற்றி சாதனைப் படைத்தமைக்காக வழங்கப் பட்டது.
  • மத்திய மின்சார ஆணையம் (CEA) ஆனது, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி அன்று தனது 50வது ஸ்தாபன தினத்தினைக் கொண்டாடியது.
    • இது 2003 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
  • மைக்ரோசாப்ட் நிறுவனமானது, ஆக்டிவிஷன் ப்ளிஸார்ட் என்ற ஒளிப்படக்காட்சி விளையாட்டு வெளியீட்டு நிறுவனத்தினை 69 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கையகப்படுத்தியுள்ளது.
  • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 48 வருட வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்