TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 25 , 2023 397 days 257 0
  • அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மூன்று புலிகள் காப்பகங்களான நம்தாபா, பக்கே மற்றும் கம்லாங் ஆகியவற்றில் இருக்கும் புலிகளுக்கான சிறப்புப் பாதுகாப்புப் படையினை (STPF) அமைப்பதற்கு அம்மாநிலத்தின் அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • சர்வதேச டி எல் ஆட்டோமொபைல் கூட்டமைப்பு (FIA) மற்றும் Formula E (E-Prix) ஆகிய அமைப்புகள் இணைந்து ஹைதராபாத்தில் 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மின்னூர்தி வாகன பந்தயப் போட்டியினை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
  • "How India Travels" அறிக்கையில், 2030ஆம் ஆண்டிற்குள் உலகளவில் அதிகப்படியான பயணச் செலவுகளை மேற்கொள்ளும் நான்காவது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
  • "இந்தியா-ஐ.நா. திறன் மேம்பாட்டு முன்முயற்சி" என்ற கூட்டுத் திறன் மேம்பாட்டு முயற்சியினை  இந்தியாவும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து தொடங்கியுள்ளன.
    • இது உலகளாவிய தெற்கு நாடுகளுடன் கூட்டாண்மைக் கொண்டுள்ள நாடுகளுடன் இந்தியாவின் வளர்ச்சிக் குறித்த அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை  பகிர்ந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அமிர்தா ஷேர்-கிலின் ஓவியமானது சமீபத்தில் $7.4 மில்லியன் (ரூ. 61.8 கோடி) தொகைக்கு ஏலத்தில் விடப்பட்ட நிலையில், இது ஒரு இந்தியக் கலைஞரால் பெறப்பட்ட அதிகபட்ச விலைக்கான சாதனையாக அமைந்துள்ளது.
    • 'தி ஸ்டோரி டெல்லர்' என்ற தலைப்பில் இந்த ஓவியமானது, 1937 ஆம் ஆண்டு திருமதி ஷெர்-கில் என்பவரால் வரையப்பட்டது.
  • ஹமூன் மற்றும் தேஜ் இரண்டு புயல்களானது முறையே வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலில் உருவாகின்றன.
    • தேஜ் புயல் என்று இந்தியாவால் அதற்குப் பெயரிடப்பட்ட நிலையில் ஹமூன் என்ற பெயரானது ஈரானால் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்