அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மூன்று புலிகள் காப்பகங்களான நம்தாபா, பக்கே மற்றும் கம்லாங் ஆகியவற்றில் இருக்கும் புலிகளுக்கான சிறப்புப் பாதுகாப்புப் படையினை (STPF) அமைப்பதற்கு அம்மாநிலத்தின் அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச டி எல் ஆட்டோமொபைல் கூட்டமைப்பு (FIA) மற்றும் Formula E (E-Prix) ஆகிய அமைப்புகள் இணைந்து ஹைதராபாத்தில் 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மின்னூர்தி வாகன பந்தயப் போட்டியினை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
"How India Travels" அறிக்கையில், 2030ஆம் ஆண்டிற்குள் உலகளவில் அதிகப்படியான பயணச் செலவுகளை மேற்கொள்ளும் நான்காவது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
"இந்தியா-ஐ.நா. திறன் மேம்பாட்டு முன்முயற்சி" என்ற கூட்டுத் திறன் மேம்பாட்டு முயற்சியினை இந்தியாவும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து தொடங்கியுள்ளன.
இது உலகளாவிய தெற்கு நாடுகளுடன் கூட்டாண்மைக் கொண்டுள்ள நாடுகளுடன் இந்தியாவின் வளர்ச்சிக் குறித்த அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமிர்தா ஷேர்-கிலின் ஓவியமானது சமீபத்தில் $7.4 மில்லியன் (ரூ. 61.8 கோடி) தொகைக்கு ஏலத்தில் விடப்பட்ட நிலையில், இது ஒரு இந்தியக் கலைஞரால் பெறப்பட்ட அதிகபட்ச விலைக்கான சாதனையாக அமைந்துள்ளது.
'தி ஸ்டோரி டெல்லர்' என்ற தலைப்பில் இந்த ஓவியமானது, 1937 ஆம் ஆண்டு திருமதி ஷெர்-கில் என்பவரால் வரையப்பட்டது.
ஹமூன் மற்றும் தேஜ் இரண்டு புயல்களானது முறையே வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலில் உருவாகின்றன.
தேஜ் புயல் என்று இந்தியாவால் அதற்குப் பெயரிடப்பட்ட நிலையில் ஹமூன் என்ற பெயரானது ஈரானால் வழங்கப்பட்டது.