கடலூரில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் சிலையினைத் தமிழக அரசு திறந்து வைத்துள்ளது.
பெண்களையும் கோவில் கருவறையில் பூஜை செய்வதற்கு அனுமதித்த செங்கல்பட்டு மாவட்டத்தின் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் (82) சமீபத்தில் காலமானார்.
ஸ்விகி, சோமாட்டோ, ஓலா, ஊபர் மற்றும் ராப்பிடோ உள்ளிட்ட இணையம் மூலமாக திரட்டப்பட்ட ஊழியர்களின் நலன் கருதி குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் பயன் பெறும் வகையில் அவர்களைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்த இந்தியாவின் முதல் மாநிலமாக ஜார்க்கண்ட் உருவெடுத்துள்ளது.
போபாலின் மகிளா தானா காவல் நிலையமானது, ISO (சர்வதேச தரநிலைப்படுத்தல் அமைப்பு) அமைப்பின் தரச் சான்றிதழ் பெற்ற நாட்டின் முதல் மகளிர் காவல் நிலையமாக மாறியுள்ளது.
சீனாவிலுள்ள ஹாங்சோ நகரில் நடைபெறும் 4வது ஆசிய மாற்றுத் திறனாளிகள் நபர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் 303 தடகள வீரர்கள் உட்பட 446 பேர் கொண்ட அணியானது இந்தியாவின் சார்பாக கலந்துகொள்கிறது.
மத்திய அரசானது திறன் இந்தியா திட்டத்தின் தொடர்ச்சியாக 2023-24 ஆம் ஆண்டிற்கான திறன் இந்தியா போட்டியினை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்ததோடு, 2022 ஆம் ஆண்டு உலகத்திறன் போட்டியின் வெற்றியாளர்களுக்கு புது டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
‘விமானங்களின் சரியான நேர செயல்திறன் குறித்த மாதாந்திர அறிக்கையின்படி’, பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையமானாது (KIA) “உலகிலேயே மிக சரியான நேரத்தில் இயங்கும் விமான நிலையமாக” கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து முன்னணியில் உள்ளது.