தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் சமூக அறிவியலுக்கான உயர்மட்டக் குழு, பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்ற பெயரை ‘பாரத்’ என்று மாற்றவும், பாடத்திட்டத்தில் உள்ள பண்டைய வரலாற்றுக்குப் பதிலாக ‘செந்நெறிக் காலம்’ என்ற சொல்லினை அறிமுகப்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.
ஏர் வைஸ் மார்ஷல் சாதனா S நாயர் ஏர் மார்ஷலாக பதவி உயர்வு பெற்றதையடுத்து இந்திய விமானப்படையின் வரலாற்றில் இந்தத் தரநிலையை எட்டிய இரண்டாவது பெண் மருத்துவ அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் பெண்மணி என்ற வரலாற்றினை ஏர் மார்ஷல் பத்மா பந்தோபாத்யாய் படைத்தார்.
இந்திய மற்றும் மலேசிய நாட்டு இராணுவங்கள் “ஹரிமௌ சக்தி 2023 பயிற்சியை” தொடங்கியுள்ளன.
நிகழ்நேரத்தில் காற்றின் தரத்தை அளவிடும் சுவிட்சர்லாந்து நாட்டின் தொழில்நுட்ப நிறுவனமான IQAir நிறுவனத்தினால் 109 இடங்களில் மேற்கொண்ட மதிப்பீட்டில் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் மும்பை இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் முதல் நுண் DAP ஆலையானது குஜராத்தின் காந்திநகரில் திறக்கப்பட்டு உள்ளது.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) ஆனது புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 2023 ஆம் ஆண்டு அனுபவ் விருதுகள் விழாவினை நடத்தியது.
தேசியப் பாதுகாப்புச் சபை செயலகம் (NSCS) ஆனது 'பாரத் NCX 2023' எனப்படும் 2வது தேசிய இணையவெளிப் பாதுகாப்புப் பயிற்சியினை நடத்தியது.
சட்ட அமலாக்க முகவர்கள் முக்கியமானச் செயல்பாடுகளின் போது 5G தொழில் நுட்பத்தைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான புதுமையான கருவிகளை அடையாளம் காண்பதற்காக "விமர்ஷ்-2023" என்ற தேசிய ஹேக்கத்தான் தொடங்கப் பட்டுள்ளது.
இந்தியத் தரநிலைகள் வாரியத்தின் குறியைக் கொண்டிருக்காத பட்சத்தில் அவற்றின் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி மற்றும் இருப்பு வைப்பு ஆகியவற்றினைத் தடை செய்வதற்காக தகரக் கொள்கலன் மற்றும் தகரக் குவளை (தரக் கட்டுப்பாடு) ஆணை 2023, மற்றும் தாமிரப் பொருட்கள் (தரக் கட்டுப்பாடு) ஆணை 2023 ஆகியவை அறிவிக்கப் பட்டுள்ளன.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது (CCEA), பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா - விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசனப் பயன் வழங்கீட்டுத் திட்டத்தின் (PMKSY-AIBP) கீழ் உத்தரகாண்டின் ஜம்ராணி அணை பல்நோக்குத் திட்டத்தைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியப் போட்டி ஆணையம் ஆனது, சர்வதேசப் போட்டி வலையமைப்பின் வழி காட்டுதல் குழுவில் உறுப்பினராகியுள்ளது.
இந்தியன் ஆயில் கழகமானது, இந்தியாவில் முதல் முறையாக தனித்திறன் சார்ந்த "தரநிலைக் குறிப்பு" பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றைத் தயாரித்ததன் மூலம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
கடலோர வங்காளதேசத்தில் ஏற்பட்ட ஹமூன் புயல் வலுவிழந்து, தென்கிழக்கு வங்காள தேசம் மற்றும் அதை ஒட்டிய மிசோரம் பகுதி மீது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பக்லோவில் உள்ள இராணுவத்தின் சிறப்புப் படைப் பயிற்சிப் பள்ளியானது (SFTS), சிறப்புப் படைகள் மற்றும் பாராசூட் வீரர்களின் பயிற்சி உள்கட்டமைப்பினை மேம்படுத்தச் செய்வதற்காக, இராணுவத்தின் முதல் செங்குத்து செயற்கை காற்று அமைப்பினை (VWT) அமைத்துள்ளது.
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தற்போது நுழைவு இசைவுச் சீட்டு இன்றி இலங்கைக்குப் பயணிக்க முடியும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
சவுதி அரேபிய அரசாங்கமானது, 2023 ஆம் ஆண்டு மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பருவநிலை வாரக் கொண்டாட்டங்களை 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 08 முதல் 12 ஆம் தேதி வரை ரியாத் நகரில் மேற்கொண்டது.
ரோஹித் ஷர்மா 2023 ஆம் ஆண்டில் ஒருநாள் இன்னிங்ஸ் போட்டிகளில் 50 சிக்ஸர்களை அடித்து, ஓராண்டில் நடைபெற்ற ஒருநாள் இன்னிங்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் 50 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையினைப் பெற்று உள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் (2015 ஆம் ஆண்டில் 58 சிக்ஸர்கள்) ஓராண்டில் நடைபெற்ற ஒருநாள் இன்னிங்ஸ் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.