பெங்களூருக்கு அருகில் உள்ள கைபேசி பாகங்கள் ஒருங்கு சேர்ப்பு ஆலையை விற்பனை செய்வதற்கு விஸ்ட்ரான் கார்ப் நிறுவனம் ஒப்புதல் அளித்ததை அடுத்து டாடா குழுமம் விரைவில் இந்தியாவின் முதல் ஐபோன் உற்பத்தியாளராக மாற உள்ளது.
மலேசியா அரசானது தெற்கு மாகாணமான ஜோகூரைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் என்பவரை தனது அடுத்த மற்றும் 17வது மன்னராக அறிவித்து உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ஜியோஸ்பேஸ்ஃபைபர் எனப்படுகின்ற தனது செயற்கைக் கோள் இணையச் சேவையினை இந்தியாவின் "தொலைதூரப் பகுதியில்" உள்ள நான்கு மாவட்டங்களில் சோதனை செய்துள்ளது.
14 மாவட்டங்களிலும் தனித்தன்மைத் தரக்குறியீடு (ஹால்மார்க்கிங்) வழங்கீட்டு மையங்களைக் கொண்ட இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது.