TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 31 , 2018 2312 days 706 0
  • பல் மருத்துவம் மற்றும் மருத்துவப் படிப்பிற்கு சுயநிதி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களால் விதிக்கப்படும் கட்டணங்களை முறைப்படுத்த பல்கலைக்கழக மானியக் குழுவானது (University Grants Commission - UGC) பேராசிரியர் R.C.ரேகா தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. இவர் புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் (AIIMS - All India Institutes of Medical Sciences) முன்னாள் இயக்குநர் ஆவார்.
  • முதன்முறையாக 2018-19 கல்வியாண்டில் மிசோரமில் உள்ள சைனிக் பள்ளியில் பெண் குழந்தைகள் கல்வி பயில அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்திய இராணுவம் 81 அதிக இயங்குதிறனுடைய 10 x 10 வாகனங்களைத் தயாரிக்க இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லைலாண்ட் நிறுவனத்துடன் 100 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. முதன்முறையாக இறக்குமதி வாகனங்களை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக அதிக வலுவுடைய மற்றும் அதிக இயங்குதிறன் கொண்ட வாகனங்களை இந்திய வாகனத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
  • 2019ஆம் ஆண்டிலிருந்து பிரதம மந்திரியின் ஆராய்ச்சி உதவித் தொகையானது ஆற்றல் வளமிக்க அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு IISc (Indian Institute of Science), IIT (Indian Institutes of Technology), NIT (National Institutes of Technology), IIEST (Indian Institute of Engineering Science) and Technology) மற்றும் IISER (Indian Institutes of Science Education and Research) ஆகிய துறையில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்