TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 2 , 2023 393 days 339 0
  • இந்தியக் கடற்படையானது ‘மகாபலி’ எனப்படும் 25T பொலார்டு (BP) இழுவிசைப் படகினை படையில் சமீபத்தில் இணைத்தது.
    • இது நிலையான நீரில் நிலைநிறுத்தப்பட்ட கடற்படைக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை நங்கூரமிட்டு நிறுத்தப்படும் போதும், அவற்றின் நிலை மாற்றத்தின் போதும், திருப்புதல் மற்றும் இயக்க நடவடிக்கையின் போதும் உதவும்.
  • அமெரிக்க-இந்திய உத்திசார் கூட்டாண்மை மன்றம் (USISPF) ஆனது நீதா அம்பானிக்கு 2023 ஆம் ஆண்டிற்கான அறப்பணி மற்றும் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு உணர்விற்கான உலகளாவிய தலைமைத்துவ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.
    • 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரில் உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களை கௌரவிக்கும் விதமாக வங்காளதேச அரசு அசுகஞ்ச் எனும் இடத்தில் ஒரு நினைவுச் சின்னத்தினை உருவாக்கி வருகிறது.
  • 1971 ஆம் ஆண்டு போரில் பங்கேற்ற இந்திய வீரர்களைக் கௌரவிப்பதற்காக வங்காள தேசத்தில் பிரத்தியேகமாக கட்டமைக்கப்பட்ட முதல் நினைவுச் சின்னமாக இது திகழும்.
  • அமெரிக்காவின் விர்ஜீனியா நகரைச் சேர்ந்த 14 வயதான ஹேமன் பெக்கலே, தோல் புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கும் வகையிலான வழலைக் கட்டியினை (சோப்) கண்டுபிடித்ததற்காக "அமெரிக்காவின் முன்னணி இளம் அறிவியலாளர்" என்ற பட்டத்தினைப் பெற்றுள்ளார்.
  • நிதியியல் நடவடிக்கை பணிக்குழு (FATF) வெளிநாட்டு வரிப் புகலிடமான கேமன் தீவுகளை அதன் ‘சாம்பல் நிறப் பட்டியலில்’ இருந்து நீக்கியுள்ளது.
    • கேமன் தவிர, பனாமா, ஜோர்டான் மற்றும் அல்பேனியா ஆகியவையும் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்