தனியார் துறைப் பங்களிப்புடன் துறைமுகங்களை மேம்படுத்துவதற்கான கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கேப்பிடாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் (CLI) நிறுவனமானது சென்னையின் சர்வதேச தொழில்நுட்பப் பூங்காவின் முதலாம் கட்டத்திற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.
இந்தியப் பசுமை கட்டிடச் சபையினால் (IGBC) ஆற்றல் செயல் திறன், நீர் வளங்காப்பு மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றிற்கான நிகரச் சுழிய உமிழ்வு தரம் கொண்டதாக சான்றளிக்கப்பட்ட இந்தியாவின் முதல் வணிகப் பூங்கா இதுவாகும்.
முதலாவது உலக அமலாக்க விவகாரங்கள் ஒத்துழைப்பு மாநாடு (GCCEM) ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
இராணுவத்தின் இலகுரகப் போர் ஹெலிகாப்டரான, பிரசாந்த் 70 மிமீ ஏவுகணைகள் மற்றும் 20 மிமீ சுழல் பீரங்கி மேடை கொண்ட (டரட்) துப்பாக்கிகளின் பகல் மற்றும் இரவு நேர இயக்கங்களின் முதல் சுடுதல் பரிசோதனையினை வெற்றிகரமாக மேற்கொண்டது.
மத்திய நிதியமைச்சர், செம்மரக் கட்டைகள் உள்ளிட்ட பல்வேறு மரங்களின் சட்டவிரோதமான வர்த்தகத்தைத் தடுப்பதற்கான ‘சேஷா நடவடிக்கையின்’ நான்காம் கட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
நான்காவது கோவா கடல்சார் மாநாடானது இந்தியக் கடற்படையினால் நடத்தப் பட்டது.
இந்த மாநாட்டின் கருத்துரு, "இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு: பொதுவான கடல்சார் முன்னுரிமைகளை கூட்டுத் தணிப்பு கட்டமைப்புகளாக மாற்றுதல்" என்பதாகும்.
பாரீஸ் நகரில் நடைபெற்ற விழாவில் 2023 ஆம் ஆண்டிற்கான பேலோன் டி' ஓர் விருதின் வெற்றியாளராக லியோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டார்.
மதிப்புமிக்க இந்த விருதை அவர் வெல்வது இது எட்டாவது முறையாகும்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜோதி யர்ராஜி (13.22 விநாடிகள்), தேஜஸ் ஷிர்சே (13.71 விநாடிகள்) ஆகியோர் முறையே தடகளப் போட்டிகளில் 100 மீ மற்றும் 110 மீ தடை ஓட்டத்தில் தங்கப் பதக்கங்களை வென்று கோவாவில் நடைபெறும் 37thதேசிய விளையாட்டு போட்டிகளில் சாதனைகளை முறியடித்தனர்.
மேற்கு பிரத்தியேக சரக்குப் போக்குவரத்து வழித்தடத்தின் (DFC) 77-கிலோமீட்டர் புதிய பாண்டு-நியூ சனந்த் பகுதி சமீபத்தில் திறந்து வைக்கப் பட்டுள்ளது.
உலக சைவ தினமானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 01 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
இது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் சைவ உணவின் நன்மைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை பரப்பச் செய்வதை நோக்கமாகக் கொண்டது
அனைத்துப் புனிதர்களின் நாள் என்பது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 01 ஆம் தேதியன்று கொண்டாடப்படும் பண்டிகைகளாகும்.