மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவல்களின்படி, தமிழகத்தின் தலைநகரான சென்னையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடுகள் மோசமான காற்றுத் தரம் நிலவுவதை குறிக்கும் 250 என்ற வரம்பினைத் தாண்டியுள்ளது.
புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையானது விரைவில் திறக்கப்பட உள்ளது.
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவை மற்ற இரண்டு மருத்துவமனைகள் ஆகும்.
பட்டாசுகளில் பேரியம் மற்றும் தடை செய்யப்பட்ட இரசாயனங்கள் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையானது, தேசிய தலைநகர் பகுதிக்கு மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்கும் பொருந்தும் என்று நவம்பர் 07ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
நாசா விண்வெளி வீரர் பிராங்க் ரூபியோ 371 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து சாதனை படைத்த பிறகுப் பூமிக்குத் திரும்பியுள்ளார்.
ஒரே விண்வெளி பயணத்தின் மூலம் நீண்ட நாட்கள் ஒரு அமெரிக்கர் தங்கியிருந்த சாதனையை இவர் படைத்துள்ளார்.